இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகமானது, இவ்வருட இறுதிக்குள் 4 சதவீத மட்டத்துக்கு வரும் என, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இன்றையதினம் மத்திய வங்கியின் ஐந்தாவது நாணய கொள்கையை வெளியிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வருடத்தின் முதற் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகமானது, 3.4 சதவீதத்தை பதிவு செய்திருந்ததாக தெரிவித்த அவர் வருட இறுதியில் 4 சதவீத வளர்ச்சி மட்டத்தை எதிர்பார்க்கலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Add Comment