நெதர்லாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து 217 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளதுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
Add Comment