சினிமா பிரதான செய்திகள்

வெளிவருகிறது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் தடம் :


குற்றம் 23 திரைப்படத்திற்கு பின்னர் அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப் படத்தில் அருண் விஜய்யுடன் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கின்றார். அத்துடன் ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

அண்மையில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெறப்பட்ட இப் படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரித்துள்ளார். இதேவேளை இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடும் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers