இலங்கை பிரதான செய்திகள்

தியாக தீபம் திலீபனை சுற்றி பாதுகாப்பு வேலிகள்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

நினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய சபை உருவாக்கத்தின் முதல் முயற்சியாக தியாகி.திலீபன் அண்ணையின் தூபி அமைவிடத்தை பார்வையிட்டு அப்போது பொறியியலாளரையும் அழைத்து தூபியை மீண்டும் புனரமைக்க செலவு மதிப்பிட்டு அந்த நிதிக்கு ஏற்பாடும் அதனை சூழ பாதுகாப்பு வேலிக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது.

    அதன் பிரகாரம் உடனடியாகவே பாதுகாப்பு வேலிக்கான மூலப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டு படிகள் ஆரம்பித்த நிலையில் இப் பணிக்காக இரண்டு மாத கால அவகாசம் பிடித்துக்கொண்டது. இதன்போது முதலில் பாதுகாப்பு வேலிகளை தயார் செய்து தேவைக்கேற்ப பொருத்தவும் அகற்றும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டது.

    இவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கான நிறம் தீட்டும் காலத்தில் கடந்த 31-07-2018 அன்று சபை அமர்வு இடம்பெற்று. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான வ.பார்த்தீபன் கடந்த நல்லூர் உற்சவத்தின்போது வியாபாரிகள் திலீபன்ணாவின் தூபி இடத்தையும் பயன்படுத்தியதனால் அவ்விடத்தை சுற்றி புனிதம் கருதி பாதுகாப்பு அமைக்க வேண்டும்.்என்று ஓர் கோரிக்கை விடுத்தார்.

    இதற்குப் பதிலளித்த முதல்வர் ஆனோல்ட் அதற்கான பாதுகாப்பு வேலிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டது. அதனை உடன்பொருத்த நடவடிக்கை எடுத்து பூட்டுமாறு உத்தரவிட்டார்.

    அதன் பிரகாரம் இன்றைய தினம் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers