இந்தியா பிரதான செய்திகள்

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியது…

இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.

அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers