உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஆயிரக்கணக்கான குழந்தைகளை அமெரிக்கப் கிறீஸ்தவ மத போதகர்கள் பலாத்காரம் செய்தனர்…

ஜூரிகளின் அறிக்கையில் தெரிவிப்பு…


ரொன்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்ற ஒரு போதகர் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார். இன்னொரு போதகர் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்து பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதும் பெரிய சர்ச்சைக்குள்ளாகியது. இன்னொரு சிறுவனைப் பலாத்காரம் செய்து விட்டு அவரையே பாவமன்னிப்புக் கோர வைத்துள்ளார் இன்னொரு போதகர்.

பென்சில்வேனியாவில்சுமார் 300 ரோமன் கத்தோலிக்க மத போதகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் இவர்கள். 1940களிலிருந்து முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாக தற்போது மாகாண தலைமை நீதிபதிகள் குழு நேற்று செவ்வாய்கிழமை (14.08.18) அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேவாலையத்தின் (Church) மூத்த அதிகாரிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையில் தற்போது வோஷிங்டன் டி.சியில் ஆர்க்பிஷப்பாக உள்ளவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் குற்றம்சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தகள், பலாத்காரம் செய்த போதகர்கள் குறித்த உண்மையான தரவுகள் கிடைக்கவில்லை என்று கூறிய இந்த அறிக்கையில் தேவாலைய (Church) ரகசிய ஆவண்ங்கள் தொலைந்தபடியால் தரவுகளைப் பெற முடியவில்லை தெரிவிக்கப்பட்டள்ளது.

900 பக்கத்தைக் கொண்ட அதிரும் அறிக்கையில் தலைமை ஜூரி இது பற்றி கூறும்போது, “நிறுவன ரீதியான சீர்த்திருத்தங்கள் இருந்தும், தேவாலையத்தின் (Church) தனிப்பட்ட தலைவ்ர்கள் பொதுமக்களுக்கான பொருப்பிலிருந்து தவறியுள்ளனர்.” என்று எழுதியுள்ளார்.

“சிறுவர் சிறுமியரை போதகர்கள் பலாத்காரம் செய்துள்ளனர், கடவுளின் மனிதர்களான இவர்கள் இதற்குப் பொறுப்பேற்காததுடன் ஒன்றுமே செய்யவில்லை என்பதுடன் இந்தப் பாவச்செயலை மறைத்தும் உள்ளனர்” என்று இந்த அறிக்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது..

தவறு செய்தவர்களைக் காத்ததுடன், தவறு செய்தவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலையம் (Church) பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது என்கிறார் தலைமை ஜூரி. இதில் தவறிழைத்த நூறு போதகர்கள் ஏற்கெனவே இறந்து போய்விட்டனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், சிலர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சட்டமா அதிபர் ஜோஷ் ஷபிரோ தெரிவித்தார்.

சுமார் 1.7 மில்லியன் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 போதகர்களிள் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.பாலியல் பலாத்காரம் செய்து விட்டு குற்றம்சாட்டப்பட்ட கிளர்கியை காவற்துறையில் காட்டிக் கொடுக்கவும் மறுத்துள்ளனர், ரகசியக் காப்ப்பு உடன்படிக்கைகளைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியுள்ளனர்.

இது குறித்த மவுனத்தின் சதி சர்ச்சையும் தாண்டி காவற்துறை, வழக்கறிஞர்கள் வரை நீண்டுள்ளது. இவர்கள் குற்றச்சாட்டுகளை, முறைப்பாடுகளை விசாரிக்கவும் இல்லை, பலவேளைகளில் முறைப்பாடுகளை கைகழுவி விட்டனர். டயோசீஸ் தலைவர்கள் செவ்வாயன்று பாலியல் பலாத்காரத்துக்காக பாதிக்கப்பட்டவர்களிட்ம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.இந்நிலையில் ஜூரிகளின் இந்த அதிர்ச்சி அறிக்கை வழக்காக மாறும்போது பெரிய போராட்டத்தையும் அமெரிக்க மதம் சார்ந்த வாழ்க்கையில் பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மூலம் – இந்து)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers