ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் கல்வி மையம் ஒன்றின் வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment