பிரதான செய்திகள் விளையாட்டு

பிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்


உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து கால்பந்து அணி பிபா உலகத் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  ரஸ்யாவில் நடைபெற்று முடிவடைந்த பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தினை வென்ற நிலையில் இங்கிலாந்து அரையிறுதி வரை முன்னேறி குரோசியாவிடம் தோற்றது.

இதனைத் தொடர்ந்து தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கிண்ணத்தினை வென்ற பிரான்ஸ் 6 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளது.அரையிறுதியோடு வெளியேறிய பெல்ஜியம் 2-வது இடத்தினையும் பிரேசில் ஒரு இடம் பின்தங்கி 3-வது இடத்திற்கும் சென்றுள்ளன.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோசியா16 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. உருகுவே ஐந்தாவது இடத்தையும், போர்த்துக்கல் 7-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து 8-வது இடத்தையும், ஸ்பெயின், டென்மார்க் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. அர்ஜென்டினா 6 இடங்கள் பின்தங்கி 11-வது இடத்துக்கு பின்தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.