பிரதான செய்திகள் விளையாட்டு

குரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு


குரோசியா கால்பந்து அணியின் முன்கள வீரரான மரியோ மாண்ட்சுகிச் ( Mario Mandzukic  ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியா 2-4 எனத் தோல்வியடைந்து கிண்ணத்தினைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்தது.

இந்தநிலையில். 11 வருடமாக குரோசியா அணிக்காக விளையாடி வரும் மாண்ட்சுகிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், குரோசியா அணிக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டுள்ளதுடன் இரண்டு உலகக்கோப்பை மற்றும் மூன்று ஐரோப்பிய சம்பியன் கிண்ண தொடர்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.