உலகம் பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது

சவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிமை அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதனை அவதானித்த காவல்துறையினர் அவரை சோதனையிட்ட போது அவரது இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய பட்டி அணிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த தீவிரவாதியை கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது தீவிரவாதி காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிக் முயற்சித்த போது காவல்துறையினர் துரத்திப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவிரவாதி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான பவாஸ் அப்துல் ரகுமான் எனவும் அவரிடமிருந்து ஒரு இயந்திர துப்பாக்கி, 359 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.