பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்


ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 2-ம் திகதி வரை நடைபெறுகின்ற இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெற்று வரும் இந்தப்போட்டி கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்றது.
கடைசியாக 1962-ம் ஆண்டு இந்தப்போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலையில் 56 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு இந்தப்போட்டி நடைபெறுகின்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வழக்கம் போன்று இம்முறையும் சீனாவே அதிக பதக்கங்களை கைப்பறறும் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers