இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்க காலஅவகாசம் கோரிய மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றில் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில் பேரறிவாளன் தரப்பில் முன்னலையான சட்டத்தரணிகள் ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்று சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்திருப்பதாகவும் தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவை ஒக்டோபர் மாதத்தில் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டுள்ளனர்
Add Comment