இந்தியா பிரதான செய்திகள்

கொச்சி கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை ஆரம்பமாகியுள்ளது

மழை வெள்ளம் காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்து அணைகள் அனைத்தும் நிரம்பியதனையடுத்து திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்படும் நிலையில் நிவாரணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்ததனால் கொச்சி விமான நிலையம் கடந்த 14-ம் திகதி மூடப்பட்டது. இதனால் கொச்சி வர வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்படுகின்றன.

மேலும் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers