இலங்கை பிரதான செய்திகள்

படையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…


யாழ். காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் பாவனைக்கு இன்று (21.08.18) கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மத்தி ஜே 234 கிரம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்ககைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்து வந்த இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் காணிகளுக்கான சான்றிழ், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.