இலங்கை பிரதான செய்திகள்

து. ரவிகரன் உட்பட்டோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை


முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனையும் ஏனைய 6 பேரையும் ஒக்டோபர் 30 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்த போது கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது

குறித்த 7 பேரும் முன்னர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link