இலங்கை பிரதான செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களுக்குரிய 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின்   தாக்கல் செய்த வழக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு கருதப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் கோதாபய உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரின் அரசியல் பிரவேசக் கனவு தகர்ந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • In fact this is the pea nut. They played out huge sum of funds. Where is those billion and billions of public funds played out by those Rajapaksha and co???????

Share via
Copy link
Powered by Social Snap