பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்நாமிற்கு இன்று (25.08.18) பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளார். ஓகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்து கொள்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தின்போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Add Comment