இலக்கியம் பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இந்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. வண்டில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியமை தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த காவற்துறையினர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றுமொருவர் தப்பி சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாணைகளை தர்மபுரம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.