Home இந்தியா இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளனர்…

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளனர்…

by admin

நடப்பாண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 204 பேரும் மேற்கு வங்காளத்தில் 195 பேரும் கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் முறையே 161 பேரும் மற்றும் 46 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலங்கள் ஒவ்வொரு இயற்கைப் பேரழிவுக்கும் பின்னர் நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் வரவுசெலவுத்திட்டத்தில் பேரிடர்கால ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனியாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More