ஜெர்மனியில் துருக்கி ஹிட்லர் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகனின் 13 அடி பொற்சிலையை தீயணைப்பு வீரர்கள் அகற்றி உள்ளனர். ஜெர்மனியில் கெட்ட செய்தி என்னும் தலைப்பில் இடம்பெற்று வருகின்ற கலை விழாவில் வைக்கப்பட்டுள்ள எர்டோகனின் சிலையிலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து எர்டோகனின் ஆதரவாளர்களுக்கும், விமர்சகர்களுக்குமிடையே எழுந்த கருத்து வேறுபாட்டினை அடுத்து அந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. காத்திரமான உரையாடலுக்கு இது வழிவகுக்கும் என நினைத்தே தாங்கள் இவ்வாறு துருக்கி ஹிட்லர் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துருக்கி ஜனாதிபதியின் சிலையை வைத்ததாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment