இலங்கை பிரதான செய்திகள்

பெற்றோலிய கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு :

பெற்றோலிய  கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபனத்தில் வேலைபார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களில் இவ்வாண்டு பல்கலைகழகம் செல்ல அனுமதி பெற்ற மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாம் எல்லோரும் பொதுமக்கள் பணத்திலேயே கல்வியை கற்றோம். அமைச்சர் என்ற ரீதியில் எனது சம்பளமும் பொதுமக்கள் பணத்தில் இருந்தே தரப்படுகின்றது. ஆகவே எமக்கு இந்த கடனை நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்ற பொறுப்புள்ளது. இந்த சிந்தனை நம் எல்லொரிடத்திலும் இருந்தால் எமது நாடு இலகுவாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும். ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் அவர்களது வளங்களையும் உழைப்பையும் விற்கின்றனர்.

இங்குள்ள பெற்றோர்களின் கடின உழைப்பினாலேயே இந்த கூட்டுத்தாபனம் முன்னோக்கிச் செல்கின்றது. மற்றைய நாடுகளில் செலவீனம் காரணமாக விரைவாகவே நிறுவனத்தை தனியார் மயப்படுத்திவிடுகிறார்கள். எம்மில் சிலர் நினைக்கின்றனர் எமது நாட்டுக்கும் இதுவே சிறந்த முடிவு என்று. இந்த சிந்தனையானது தனியார் மயமாக்கலுக்கு வழிசமைக்கும் என்றார்’ அமைச்சர்.
1982 ஆம் ஆண்டு தலா 5000 ரூபா வழங்குவதில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த புலமைப்பரிசிலானது தற்போது வருடத்திற்கு 60000 ரூபாவாக வழங்கப்படுகின்றது. 30000 என்ற ரீதியில் இரண்டு கட்டங்காளக பிரித்து வழங்கப்படவுள்ளது.

2016/2017 ஆம் ஆண்டு பல்கலைகழகத்துக்கு தெரிவான 25 மாணவர்களுக்கு இந்த புலமைபரிசில் வழங்கப்படவுள்ளது. வைத்திய பிரிவில் 03, பொறியியல் பிரிவில் 03, விஞ்ஞான பிரிவில் 10, தகவல் தொழில் நுட்பப்பிரிவில் 03, முகாமைத்துவ பிரிவில் 04 மற்றும் கலை பிரிவில் 02 மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers