இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி காவல்துறை பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பெரும் குற்றப் பிரிவுப் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்

1 Comment

Click here to post a comment

Leave a Reply to “இருவருக்கும் உறவு இருந்தது – என்னுடையதே குழந்தை, கழுத்தை நெரித்தே கொலை செய்தேன்!” – GTN Cancel reply