அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்தன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்தும் வெற்றி வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 36.1 ஓவரில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 23.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார்.
முதலில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது தொடரினையும் ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
Add Comment