இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை 32 ரூபா மட்டுமே


இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லீற்றர் பெட்ரோல், டீசல் விலை மிக மிகக் குறைவு என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டொலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 81.58 ரூபாவாகவும் , டீசல் லீற்றர் 74.18 ரூபாவாகவும்; காணப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லீற்றர் பெட்ரோல், டீசல் விலை மிக மிகக் குறைவு என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறித்த விவரங்களை கேட்டு மத்திய அரசின் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்துக்கு தற்போது அந்த நிறுவனம் வழங்கிய பதிலிலேயே மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஹொங்காங், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த நாடுகளுக்கு ஒரு லீற்றர் பெட்ரோல் 32 முதல் 34 ரூபா வரையிலும், ஒரு லீற்றர் டீசல் 34 ரூபா முதல் 36 ரூபா வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.