உலகம் பிரதான செய்திகள்

ஏமனில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் கொல்லப்பட்ட விமான தாக்குதலுக்கு கூட்டுப் படைகள் கவலை

ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் கடந்த மாதம் சவூதியின் ஜிசான் நகரின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டமைக்கு பதிலடியாக கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல சந்தைப்பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 40 குழந்தைகள் உட்;பட 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 குழந்தைகள் உட்பட 79 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான சர்வதேச விசாரணைக்கு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவூதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதாக தெரிவித்து இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.