சினிமா பிரதான செய்திகள்

வெடி கொளுத்த தயாராகுங்கள் – சர்கார் குறித்து வரலட்சுமி – (வீடியோ இணைப்பு)


எதிர்வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், இந்தப் படத்தை பார்த்து வெடி கொளுத்த தயாராகுங்கள் என்று டுவிட்டர் பதிவொன்றை எழுதியுள்ளார்.

இயக்குனர் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும்  ‘சர்கார்’ திரைப்படத்தில் விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அத்துடன்  வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தத் திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

விஜய் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார்.அத்துடன், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

சர்கார் திரைப்படத்தின் முதல் சுவரொட்டி (பர்ஸ்ட் லுக்) மத்திரம் வெளியாகியுள்ள நிலையில், ஒக்டோபர் 2ஆம் திகதி பாடல்கள் வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.