இந்தியா பிரதான செய்திகள்

ஜே.என்.யு. மாணவர் கன்னையா குமார் பாராளுமன்ற தேர்தலில் போட்டி:


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். கன்னையா குமார் உட்பட 4 மாணவர்கள் கடந்த வருடம் அப்சல் குரு நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராக கோசம் எழுப்பியதாக தெரிவித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னையா குமார் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியான அப்சல் குருவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.