Home இலங்கை அவுஸ்ரேலிய தலைவர்களை கொல்ல முயற்சி? ஐ.எஸ். உடன் இலங்கை அமைச்சரின் மருமகன்!? ஏபிசி

அவுஸ்ரேலிய தலைவர்களை கொல்ல முயற்சி? ஐ.எஸ். உடன் இலங்கை அமைச்சரின் மருமகன்!? ஏபிசி

by admin

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பானவர் என இலங்கை அமைச்சர் ஒருவரின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் விளையாட்டுத்துறை அ மைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகனே அவுஸ்ரேலிய நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய நாட்டில் ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான நிஸாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையின் தகவலை அவுஸ்ரேலிய தேசிய ஊடகமான ஏபிசி ஊடகம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் இலங்கையில் முக்கிய பதவியில் உள்ள அமைச்சரின் மருமகன்,  என்றும் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் (Jehan Kamer Cassim) என்பவரின் பேரன் என்றும் அந்த ஊடகம் கூறுகின்றது.

நிஸாம்டீன் அவ்வாறு ஈடுபட்டிருக்கமாட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளபோதும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட நாட்குறிப்பேட்டிலிருந்து, இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்ரேலியா காவற்துறையினரை கோடிட்டு  ஏபிசி  செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னனாள் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை கொல்ல இதன்போது திட்டமிடப்பட்டிருப்பதாகவு கூறியுள்ள காவற்துறையினர், சிட்னி உள்ளிட்ட அவுஸ்ரேலிய நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்த திட்டமிட்டமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். (plans to kill former prime minister Malcolm Turnbull and his deputy Julie Bishop. The alleged list of targets also included the former speaker Bronwyn Bishop, the Sydney Opera House.)

இதேவேளை

நிஸாம்டீனின் சகோதரர் Kamer கமரின் நண்பரான மித்ரா டி அல்விஸ், கமர் சார்பில் முகநூலில் ஒரு பதிவை மேற்கொண்டுள்ளார். நிஜாம்டீன் “ஒரு திறந்த மனதுடன் செயற்படும் ஒரு முஸ்லிம்” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரை நன்கு தெரியும் என குறிப்பட்டுள்ள அவர், அருவருப்பான, வெறுக்கத்தக்க குற்றங்களில் அவர் ஈடுபட எந்த காரணமும் இல்லை எனவும், ஒரு அப்பாவியாகவே தனக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைது குறித்து எவரும் தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ள கமர், இந்த தேவையற்ற நிகழ்வுகளால் தாம் கடுமையாக உடைந்து போய் இருப்பதாகவும், ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கமரின் சார்பில் பதிவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக அடிப்படையில் மேலும் சோதனைகளை நடத்துவதற்கு முன்னர் கடந்த வெள்ளி அன்று நிஜாம்டின் குடியிருக்கும் சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் இருந்து கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் எந்த குற்றவியல் வரலாற்றையும் கொண்டிராத நிஸாம்டின், தனக்குள்ளேயே செயல்படுவதாக காவற்துறையினர் குற்றம் குற்றம்சுமத்தி உள்ளனர. எனினும் அவர் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திறனை கொண்டவர் அல்ல எனவும் அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் அவரது மாணவர் விசா காலாவதியாகும் போது, அவுஸ்ரேலிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதால் அவரை அவுஸ்ரேலியாவில் தண்டிக்க முடியும். அந்த வகையில்  நிஸாம்டீன் குற்றங்கள் இழைத்து, அவை நிரூபிக்கப்படும் சந்தர்பத்தில் அவருக்கு 15 வருட கால சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவுஸ்ரேலிய தேசிய ஊடகமான ஏபிசி மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிட்னியில் கைது….

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More