இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

எல்லை தாண்டிய இந்திய படகுகள் – தீர்ப்பை ரத்துச் செய்யுமாறு கோரிய வழக்கு தள்ளுபடி…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

எல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யுமறு படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று இந்திய இழுவைப்படகுகளை புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு கடந்த மாதம் 28ம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த குறித்த படகுகளின் உரிமையாளர்கள் மேற்படி தீர்ப்பை இரத்து செய்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரி யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்

இவ்வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இதை தள்ளுபடி செய்து நீதவான் உத்தரவிட்டார்.

உரிமையாளருக்கன தவணை தேவைக்கு அதிகமாகவே நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தும் உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோராதபடியால் மேற்படி படகு அரசுடமையாக்கப்பட்டதை சட்டிக்கட்டி நீதவான் இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers