இந்தியா பிரதான செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் விவகாரம் – 6 மாநிலங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் கட்டுப்பாடு


மேற்கு தொடர்ச்சி மலையில், குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. நிலப்பரப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வரைவு அறிவிக்கையை குறித்த 6 மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்ட போதும் பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் வரைவு அறிவிக்கை காலாவதியாகியதனால், மீண்டும் வெளியி:வதற்கு பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அனுமதி கோரியிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, மாநிலங்களின் தாமதம், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவாது என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.