இலங்கை பிரதான செய்திகள்

வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது…

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலான ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆறு மாதக் காலமாக தேடப்பட்டு வந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய குமாரசாமி நிலோஜன்  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நேற்றையதினம் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.