உலகம் பிரதான செய்திகள்

தெற்கு எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு


தெற்கு எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள்; இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers