இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்துள்ள போது அங்கு காணப்பட்ட கிணற்றிலிருந்து ஆபத்தான வெடி பொருட்களை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் முருங்கன் காவல் நிலையத்தில் நேற்று புதன் கிழமை (5) முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர்; மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்கள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers