உலகம் பிரதான செய்திகள்

இந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்…


எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக குற்றச்சுமத்தியுள்ள பாகிஸ்தான் பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே 2003–ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்துமீறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ராவுப் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு வரவழைத்து, தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. மேலும் 2003–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா மதித்து நடக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.