பிரதான செய்திகள் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டி இன்று


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந் நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி பல விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

அதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான அலஸ்டைர் குக்கின் இறுதி டெஸ்ட் போட்டி இது என்பதனால் இந்தப் போட்டி இங்கிலாந்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.