அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் காயம் காரணமாக நடப்பு சம்பியன் ரபேல் நடால் பாதியிலேயே விலகியுள்ளார்.
உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் அரை இறுதிப் போட்டியில் டெல்போட்ரோவை எதிர் கொண்ட நிலையில் நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மூன்றாவது செட் ஆரம்பிக்கவிருந்த நிலையில் நடால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், டெல் போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Spread the love
Add Comment