உலகம் பிரதான செய்திகள்

சிரியாவுடன் போர்நிறுத்தத்திற்கு ரஸ்யா மறுப்பு – புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது


சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஸ்யா ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இட்லிப் மாகாணத்தின் தென் மேற்கில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிரியாவின் வட பகுதியில், மக்கள் கொல்லப்படுதவனை தடுக்க துருக்கி விடுத்த போர் நிறுத்தத்தினை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துவிட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் நடத்தப்படுகிறது.ஈரான் மற்றும் துருக்கியோடு இடம்பெற்ற முத்தரப்பு சந்திப்பில் புட்டின் இட்லிப் மாகாணத்திலுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதை ரஸ்யா தொடரும் என தெரிவித்துள்ளார்.

சுமார் 30 லட்சம் பேர் வாழுகின்ற இட்லிப் மாகாணம் சிரிய அரசு எதிர்ப்பு போராளிகளின் கைவமுள்ள கடைசி முக்கிய இடமாகும். ரஸ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் சிரிய ராணுவம் இங்கு மிக பெரிய தாக்குதலை விரைவில் நடத்தவுள்ளதொக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.