இலங்கை பிரதான செய்திகள்

சிங்கப்பூருடனான ஒப்பந்தம், சட்டவிரோதமானது…

பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றிக் கைச்சாத்திடப்பட்டது –

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும்.

 ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம்  இன்று வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் தெரியாது. எனினும் மே முதலாம் திகதி முதல் இவ்வொப்பந்தம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் நூற்றுக்கு ஐம்பது வீதம் பொருட்களுக்கான வரி விலக்களிப்படுகின்றது. மேலும் சர்வதேச ரீதியில் வருமானம் பெறக் கூடிய பிஸ்கட் உற்பத்திகள், இறப்பர் உற்பத்தி மற்றும் சுண்ணாம்பு உற்பத்திகள் உள்ளிட்டவை மூலமான வருமானம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான வேலை திட்டத்தை அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • So nice parliament MP’s of Sri Lanka. Just these buggers made fast as sleep with having nice liqueur or with their wives. Just now I think he would have woke up all of a sudden known this bi lateral agreement between Singapore and Sri Lanka. What a shame ya that this agreement signed already and came into effect on May 2018. This fellow knows just on Sep 2018. Though these our saviours of our nation just sleep until at least four months stretch. Then how would our development programs will move forward in expedited manner that poor public need for our country. May God bless our mother Sri Lanka.