உலகம் பிரதான செய்திகள்

டிரம்ப் பதவியேற்பு விழாவில் திரண்ட மக்கள் தொகை போலியானது –

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியான போட்டோஷொப் செய்யப்பட்ட படம் எனும் உண்மை வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற போது அவரது பதவியேற்பு பற்றி ஊடகங்களிடம் கூறிய செய்தித்துறை அமைச்சர் அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு வந்த மக்கள் கூட்டமே மிக அதிகம் என தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து அப்போதே சமூக வளைதளங்களில் கடுமையாக கேலி செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டது. காரணம் ஒபாமாவின் பதவியேற்பு கூட்டத்திற்கு கூடிய மக்களை விட டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு என ஆதாரங்களுடன் பலரும் பல்வேறு புகைப்படங்களை இணையத்தில் பரவிட்டனர்.

இந்நிலையில் டிரம்பின் பதவியேற்பு கூட்டத்தில் கூடிய கூட்டத்தின் உண்மை தண்மையை அறிய முயன்ற கார்டியன் செய்தி நிறுவனம் அதற்காக அமெரிக்காவில் உள்ள தகவல் அறியும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அமெரிக்க அரசு வெளியிட்ட பதவியேற்பு விழா புகைப்படங்கள் தொடர்பான தகவல்களை கேட்டது.

இதற்கு பதிலளித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக அரசு தரப்பில் வெளியான படம் போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட படம் எனும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

அந்த ஆவணத்தில் தனது பதவியேற்பு விழாவில் போதிய மக்கள் கூடாத காரணத்தால் அதிருப்தி அடைந்த டிரம்ப் அதிக கூட்டம் திரண்டது போன்று போடோஷாப் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் உண்மை படத்தில் இருந்த காலி இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் இருப்பது போல் போட்டோஷாப் செய்து போலி படம் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.