உலகம் பிரதான செய்திகள்

நைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து – 18 பேர் பலி…

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நேற்று மாலை கிடங்கில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதனை தொடர்ந்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அருகே உள்ள சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அயலவர்கள் என 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தகவல் அறிந்து விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்த மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான எரிவாயு கிடங்குகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபடாத காரணத்தால் அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் விபத்துகள் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers