பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது


இலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது என அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். சமீபகாலத்தில் தாங்கள் ஒரு நாள் தொடர் எதனையும் வெல்லாத போதிலும் தென்னாபிரிக்காவுடனான ஓரு நாள் தொடரின் இறுதியில் விளையாடிய விதம் தங்களுக்;கு தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்தை வெல்வோம் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்ற போதிலும் எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி விளையாடினால் , துடுப்பாட்டம் பந்து வீச்சு களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டால் தங்களால் வெல்ல முடியும் எனவும் மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.மேலும் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை சாதாரணமாக எடுத்துவிட முடியாது எனத் தெரிவித்த அவர் இது மிகவும் கடினமான தொடர் எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் சிறிய தவறை செய்தால்; கூட முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எதரிவித்த மத்தியூஸ் மலிங்கவிற்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவார் என்ற முழு நம்பிக்கையுள்ளது எனவும் மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers