இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்பு பிரிவு உருவாக்கம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக தீயணைப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு இன்று அங்குராபர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இன்று (11-09-2018) மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள் உள்ளிட்டன உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்ததையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன. இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றின் தேவை குறித்து பல தரப்பினர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கமைவாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் அவர்களினால் 97 மில்லியன்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சுரேஸ், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, தவநாதன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.