பிரதான செய்திகள் விளையாட்டு

கிளென் மக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அன்டர்சன்


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டர்சன்(Anderson )   ,மக்ராத்தை பின்தள்ளி சாதனை படைத்துள்ளார். ஜேம்ஸ் அன்டர்சன் 564 விக்கெட்டுகளைப் பெற்றதன் மூலம் கிளென் மக்ராத்(Glen McGrath ) தின் சாதனையை முறியடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தில் இருந்த அவுஸ்ரேலியாவின் மக்ராத்தை பின்தள்ளி அன்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுக்களை எடுத்துள்ள நிலையில் அன்டர்சன் ன் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.