பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கையுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி


இலங்கை இந்திய பெண்கள் அணிகளுடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.  இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

அந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்றையதினம் காலி மைதானத்திவ் நடைபெற்றது. இதில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link