இந்தியா பிரதான செய்திகள்

11 மாநிலங்களில் நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க தனிநீதிமன்றங்கள்

நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 தனி நீதிமன்றங்கள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றில் தகவல் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற சிரேஸ்ட சட்டத்தரணி அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 1,581 வழக்குகளில் எத்தனை வழக்குகள் ஒரு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தது.

உச்ச நீதிமன்றில் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 7.8 கோடி ரூபாய் செலவில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.இந்தநிலையில் 11 மாநிலங்களில் 12 தனி நீதிமன்றங்கள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த 12 சிறப்பு நீதிமன்றங்களில் 6 செசன்ஸ் நீதிமன்றங்கள் ஆகும். 5 மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் ஆகும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கும் சிறப்பு நீதிமன்றம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த வகையில் ஒட்டுமொத்த மாநிலங்களும் இந்த சிறப்பு நிதிமன்ற அதிகார வரம்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers