சினிமா பிரதான செய்திகள்

சூரியா இது? சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்

சிறப்பான உடற்கட்டுடன் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இன்றைய திரைப்படங்களில் சூரியின் நடிப்புக்கு தனியான மதிப்பு ஒன்று உள்ளது. நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் புதிய படங்களில் சூரி தனது நகைச்சுவையை நடிப்பு தளத்தை இன்னும் விரிவாக்கியுள்ளார்.

‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் பல கதாநாயர்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார். அனைத்துப் படங்களும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூரியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரி சிறப்பான (சிக்ஸ் பேக்ஸ்) உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் 8 மாதங்களாக சூரி இதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap