குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் நேற்று புதன் கிழமை (12.09.18) மாலை கணpனிப் பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நற்பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர் கே.பவமொழி பவன் தலைமையில் தாழ்வுபாடு ஆலய மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் 20 ஆவது கிராமமாக தாழ்வுபாடு கிராமம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாதங்களை அடிப்படையாகக் கொண்ட கணனி பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் தாழ்வுபாடு பாங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஜேசுராஜா அடிகளார் ஆகியோர் உற்பட கணனிப்பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment