மகாவலி திட்டம் என்ற பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதற்கு தமது எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற திருகோணமலை – திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த கோரி அண்மையில் முல்லைத்தீவில் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment