இந்தியா பிரதான செய்திகள்

வட இந்திய வானொலிகளில் ராஜேந்திர சோழன் வரலாறு ஒலிபரப்பப்படுகிறது…

அகில இந்திய வானொலியில் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுவதாக பாரதீய ஜனதா கட்சியின் நாமாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்துள்ளார். சோழ மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனை பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், பாரதீய ஜனதா கட்சியின் நாமாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆகும். அவரது வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பொருட்டு இன்று வெள்ளிக்கிழமை (14.09.18) இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும், சில எப்.எம் வானொலிகளிலும் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது என அவர் நேற்றையதினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டும், டெல்லியில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும், அவரது வரலாற்றை இந்தியா முழுவதும் பாடசாலைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.