பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் – நாளை முதலாவது போட்டியில் ; இலங்கை – பங்களாதேஸ் அணிகள் போட்டி


6 நாடுகள் பங்கேற்கும்14வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் போட்டியிடுகின்றன. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப்போட்டியானது 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றது. இறுதியாக 2016-ம் ஆண்டு பங்களாதேசில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியா கிண்ணத்தினைக் கைப்பற்றியிருந்தது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 6 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இறுதிப்போட்டி 28-ம் திகதி இடம்பெறும் என்கின்ற நிலையில் நாளையதினம் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் போட்டியிடுகின்றன. ஆசிய கோப்பையை இந்தியா 6 முறையும், இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.